கர்நாடக தேர்தல் அறிவிப்பு ; அதிர்ச்சியில் எடப்பாடி அணி? : வடை போச்சே!

செவ்வாய், 27 மார்ச் 2018 (11:53 IST)
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் இன்று டெல்லியில் செய்தியாளர்கள் முன்பு அறிவித்தார். 

 
அப்போது, கர்நாடக சட்டசபையில் 224 பேரவை தொகுதிகளுக்கும்  ஒரே கட்டமாக வருகிற மே 12ம் தேதி வாக்குபதிவு நடைபெறும் என அறிவித்தார். மேலும், வேட்பு மனு தாக்கல் ஏப் 17ம் தேதி எனவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.  
 
அப்போது, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதற்கு தடை விதிக்கப்படுமா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.  
அதற்கு பதிலளித்த ஆணையர் “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தடையில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்துவதில் தேர்தல் ஆணையம் குறுக்கிடாது. கர்நாடக தேர்தலுக்கும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கும் தொடர்பில்லை” எனத் தெரிவித்தார்.


கர்நாடக தேர்தலை காரணம் காட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகராத்தை தள்ளிப் போட மத்திய அரசு திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக எதிர்கட்சிகள் எழுப்பும் பிரச்சனைகளுக்கு, இதையே காரணம் காட்டி தப்பிக்கலாம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு காத்திருந்ததாக தெரிகிறது. 
 
ஆனால், அதற்கு தடையில்லை என தலைமை ஆணையர் தெரிவித்து விட்டது எடப்பாடி மற்றும் மத்திய அரசுக்கு அதிர்ச்சியை கொடுத்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்