தேனி மாவட்டம் குள்ளப்பகவுண்டன்பட்டி கிராமத்தில் காட்டு யானைகள் கிராம மக்களை உயிர்பயத்துக்கு உள்ளாக்கியுள்ளது. பசுமையான வளம் கொண்ட கிராமத்தில், காட்டு யானைகளின் செயல்களால் விவசாய நிலத்தில் உள்ள தென்னை மரங்கள் மற்றும் விலை நிலங்கள் சேதம் அடைந்துள்ளது.
மேகமலை சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து செய்யும் சேட்டைகளால் கிராம மக்கள், கூலி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அனைவரின் வேலைகள் பெருமளவில் தடைப்பட்டுள்ளதோடு, ஊரை விட்டு வெளியேறவும் திட்டமிட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.