புயல் பாதிப்பு எதிரொலி: மின்கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு..!

வியாழன், 7 டிசம்பர் 2023 (06:19 IST)
சென்னை உள்பட புயல் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் மின்சார கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மின் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தெரிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்பட வட மாவட்டங்களில் கன மழை மற்றும் பெரு வெள்ளம் காரணமாக மக்கள் தத்தளித்து வருகின்றனர். அடிப்படை வசதிகளான குடிதண்ணீர் சாப்பாடு பால் உள்ளிட்டவை கிடைக்காமல் பல இடங்களில் மக்கள் திண்டாடி வருகின்றனர்

இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக மின் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

மேற்கண்ட நான்கு மாவட்டங்களில் டிசம்பர் 18ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு மேற்கண்ட நான்கு மாவட்ட மக்களும் அபராதம் இன்றி மின் கட்டணம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்