போன மாசம் 6 ஆயிரம், இந்த மாசம் 50 ஆயிரம்: மின்கட்டணம் குறித்து ‘வலிமை’ நடிகை புலம்பல்

செவ்வாய், 30 ஜூன் 2020 (07:53 IST)
லாக்டவுனுக்கு பின்னர் மின்சார ரீடிங் எடுக்கும் போது பல மடங்கு மின்கட்டணம் அதிகரித்திருப்பதாக தமிழகம் உட்பட இந்தியா முழுவதுமே பொதுமக்கள் அந்தந்த மாநில மின்சார துறை குறித்து குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே 
 
தமிழகத்தை பொறுத்தவரை நடிகர் பிரசன்னா இதுகுறித்து தனது டுவிட்டரில் ஆவேசமான ஒரு கருத்தை தெரிவித்து இருந்தார். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை அடுத்த நாளே அவர் மின்வாரியத்திடம் வருத்தம் தெரிவித்து தன்னுடைய கருத்து தவறு என்று கூறினார் 
 
இதேபோல் பிரபல நடிகை கார்த்திகா நாயர் மற்றும் பாலிவுட் நடிகை டாப்சி உள்பட ஒரு சில நடிகைகள் தங்கள் வீட்டின் மின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது என்றும், அதற்கு மின்சாரத்துறை என்ன விளக்கம் அளிக்கப் போகிறது என்று கேள்வி எழுப்பினர்
 
போன மாசம் 6 ஆயிரம், இந்த மாசம் 50 ஆயிரம்
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’காலா’ திரைப்படத்தில் நடித்தவரும் தற்போது அஜித் நடித்து வரும் வலிமை படத்தில் நாயகியாக நடித்து வருபவருமான ஹூமா குரோஷி தனது வீட்டில் கடந்த மாதம் வெறும் 6 ஆயிரம் ரூபாய் மட்டுமே மின்கட்டணம் வந்ததாகவும் ஆனால் இந்த மாதம் ரூபாய் 50,000 வந்திருப்பதாகவும் ஒரே மாதத்தில் 700 சதவீதம் மின் கட்டணம் எப்படி அதிகரித்தது? என்பதை மின்துறை தான் விளக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார் 
 
மகாராஷ்டிர மாநிலத்தை பொறுத்தவரை மின்துறை அதானி நிறுவனத்திடம் அம்மாநில அரசு ஒப்படைத்துள்ளது என்பதால் அந்நிறுவனம் தான் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்