சென்னையில் 55 மின்சார ரயில்கள் ரத்து.. பேருந்துகளில் அலைமோதும் பயணிகள் கூட்டம்..!

Mahendran

சனி, 27 ஜூலை 2024 (14:41 IST)
சென்னையில் இன்று 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன
 
சென்னை அருகே தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக இன்றும் நாளையும் மின்சார ரயில் சேவைகள் காலை மற்றும் இரவு நேரங்களில் ரத்து செய்யப்படுகிறது. குறிப்பாக இன்று மட்டும்  55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை இயக்கப்படும் பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகளுக்கும் சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும் இதனால் பேருந்துகளில் கூட்டம் அலைமோதி வருவதாகவும் கூறப்படுகிறது.
 
மேலும் ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஆகியவற்றிலும் பயணிகள் பயணம் செய்து வருவதாகவும் பயணிகள் கூட்டம் அதிகமானதை அடுத்து ஆட்டோவில் அதிக கட்டணம் கேட்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் வாகனங்கள் அதிகரித்து உள்ளதால் சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் வாகனங்கள் சாலைகளில் ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது என்றும் கூறப்பட்டு வருகிறது
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்