நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கில் கைதானவர்களுக்கு எலெக்ட்ரிக் ஷாக்!

Sinoj

புதன், 31 ஜனவரி 2024 (20:58 IST)
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எலெக்ட்ரிக்  ஷாக் கொடுக்கப்பட்டதாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

நாடளுமன்றத்திற்குள் அத்துமூறி நுழைந்து வண்ணப்புகை டின்களை  வீசிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் பாதுக்காப்பு குறைபாடு பற்றி கேள்வி எழுப்பி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரில் 5 பேர் எலெக்ட்ரிக்  ஷாக் கொடுத்து கொடுமைப்படுத்தியதாக பாட்டியாலயா நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

இந்த வழக்கை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்