தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் தேதியை விரைவில் அறிவிக்க இருப்பதாக தலைமை தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி, தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, டெல்லியில் இன்று மாலை 4.30 மணிக்கு தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு என தெரிகிறது.