துவங்கியது பேச்சுவார்த்தை: திமுக - காங்கிரஸ் சுமூக நிலையை எட்டுமா?

வியாழன், 25 பிப்ரவரி 2021 (10:49 IST)
திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது. 

 
தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவியிருப்பதை அடுத்து திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி தொகுதி உடன்பாடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன் படி இன்று பெச்சுவார்த்தை நடைபெறும் என கூறப்பட்டது. 
 
இதையொட்டி காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்களான உம்மன் சாண்டி மற்றும் குண்டு ராவ் ஆகியோர் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது. இன்று இதற்கு முடிவு எட்டப்படும் என தெரிகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்