இதையடுத்து அமைச்சர் விஜய் பாஸ்கர் அலுவலகம் மற்றும் வீட்டில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பல ஆவணங்கள் சிக்கியது. அதில் ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா குறித்த ஆவணம் சிக்கியது.
இந்த ஆவணங்களை தலைமை தேர்தல் ஆணையம் அறிக்கையாக நேற்று வெளியிட்டது. அதில் முதல்வர் எடப்பாடி உள்பட 6 அமைச்சர்களின் பெயர்கள் இடம்பெற்று இருந்தது. இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளது. இதுகுறித்து நாளை அல்லது இன்று மாலை தங்கள் முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். ஏற்கனவே தமிழிசை அதிமுக சின்னத்தை முடக்க வேண்டும் வலியுறுத்தியபோது. தேர்தலை ஆணையம் அதிமுக சின்னத்தை முடக்கியது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தினகரன் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.