விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இந்த இடைத் தேர்தலை சந்திக்க தீவிரம் காட்டி வருகின்றனர்
குறிப்பாக அதிமுக இந்த இரண்டில் ஒரு தொகுதியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வசமும், விக்கிரவாண்டி தொகுதி திமுக வசமும் இருந்த நிலையில் இரண்டில் ஏதாவது ஒன்றை கைப்பற்றினால் கூட தங்களுக்கு மிகப்பெரிய வெற்றி என அதிமுக தலைமை கருதுகிறது
இந்த நிலையில் தேர்தல் ஆணையம் பணம் பட்டுவாடா செய்வதை தடுப்பதற்காக தீவிர முயற்சி எடுத்து வருகிறது. பணப்பட்டுவாடா எல்லை மீறினால் ஆர்கேநகர் தேர்தலை ரத்து செய்தது போல், இந்த இரண்டு தொகுதிகளிலும் தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் தயங்காது என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் பணப்பட்டுவாடா கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டுவர தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்