இந்நிலையில் ஈரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையின் உள்ள ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி 3 வது நாளாக நடைபெறும் போராட்டத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்துகொண்டு பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்று இவர்களின் கோரிக்கை நியாயமானது. அரசு இவர்களது கோரிக்கையை உடனடியாக ஏற்க வேண்டும்.
காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தான் அதிமுகவில் இப்போது இருந்திருந்தால் முதல்வர் ஆகியிருப்பேன் என்று கூறியுள்ளார். இது அவரது தனிப்பட்ட கருத்து. அப்படியானால் பாஜகவில் அவர் இருந்திருந்தால் பிரதமர் ஆகியிருப்பாரா? என்று கிண்டல் செய்தார்.