முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

Mahendran

திங்கள், 17 ஜூன் 2024 (18:28 IST)
பல்லடம் அருகே முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதை அடுத்து அதிலிருந்து லட்சக்கணக்கான முட்டைகள் சாலையில் சிதறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்த விபத்து  காரணமாக தாராபுரம் பல்லடம் சாலையில் லட்ச கணக்கான முட்டைகள் சாலைகள் சிதறியது. மேலும்  முட்டையிலிருந்து வெளியான வெள்ளை கரு மற்றும் மஞ்சள் கரு ஆறு போல் ஓடியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கண்டெய்னர் லாரி பின்னால் வந்த லாரி மற்றும் அரசு பேருந்து மோதிக்கொண்டதை அடுத்து நிலை தடுமாறிய கண்டெய்னர் லாரி தலைகுப்புற கவிழ்ந்துவிட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுனர் வரதராஜன் அவர்கள் உயிர் தப்பித்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து தகவல் அறிந்த முட்டையின் உரிமையாளர் வேறு வாகனத்தை கொண்டு வந்து சேதம் அடையாத முட்டைகளை சேகரித்து வருவதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்