இ ந் நிலையில் பொதுத்தேர்வு எழுதவுள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு நடைபெற இருந்த நிலையில் நிலையில் திருவண்ணாமலையில் உள்ள 2 தனியார் பள்ளிகளில் சமீபத்தில் வினாத்தாள்ககள் கசிந்தது. இந்த திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் திருவண்ணாமலை முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், தேர்வு தாள் கசிந்த விவகாரத்தில் 2 பள்ளிகளுக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருக்கும் பட்சத்தில் ஏன் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளதாக மெட்டிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் தெரிவித்துள்ளார்.