தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணங்களால் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்கவும், வேறு மாநிலங்களில் இருந்து தமிழகம் வரவும் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது. இந்நிலையில் இபாஸ் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டதால் மக்கள் அனைவருக்கும் இ-பாஸ் கிடைக்கும் விதமாக தளர்வுகள் வழங்கப்பட்டன.
இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் இ-பாஸ் முறையை ரத்து செய்வது சவாலானது என தெரிவித்திருந்தார். இதன் பின்னர் இ-பாஸ் தொடர்பாக தலைமைச் செயலாளர் அனைத்து மாவட்ட ஆணையர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். விடைவில் இது குறித்து முதல்வர் சில முக்கிய முடிவுகளை அறிவிப்பார் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.