ஸ்டாலினுக்கு தில்லு இல்லை; ரஜினிக்கு கட்சியே இல்லை! – எடப்பாடியார்

ஞாயிறு, 24 நவம்பர் 2019 (14:48 IST)
இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவை விமர்சிப்பவர்கள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. கடந்த 2018ம் ஆண்டு கஜா புயல் பாதிப்புகளால் பொதுக்குழு கூட்டப்படாத நிலையில் இரண்டு வருடங்கள் கழித்து இன்று கூட்டப்பட்டுள்ளது.

இதில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இடைத்தேர்தல் வெற்றிக்காக ஈபிஎஸ், ஓபிஎஸ்க்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் பல்வேறு உதவிகளுக்காக நன்றி தெரிவிக்கப்பட்டது.

பிறகு பேசிய முதல்வர் தொடர்ந்து அரசை விமர்சித்து வரும் மு.க.ஸ்டாலினுக்கு கண்டனங்களை தெரிவித்தார். அப்போது பேசிய அவர் ”மு.க.ஸ்டாலினுக்கு அதிமுகவை நேரடியாக எதிர்க்க தில்லு இல்லை. அதனால்தான் மறைமுகமான வழியில் பேசி வருகிறார். இன்னும் சிலர் கட்சி கூட ஆரம்பிக்காமலே அரசு மீது விமர்சனங்களை வைத்து வருகின்றனர். யார் கட்சி தொடங்கினாலும் தொடங்கட்டும். அதெற்கெல்லாம் அதிமுக கவலைப்படப் போவதில்லை” என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்