ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு செல்வேன்: அனைத்து மதத்தினர்களும் செல்லலாம்: ஈபிஎஸ்

Mahendran

வியாழன், 11 ஜனவரி 2024 (16:10 IST)
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு செல்வேன் என்றும் ராமர் கோயிலுக்கு அனைத்து மதத்தினரும் செல்லலாம் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

அயோத்தியில்  கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு காங்கிரஸ் உள்பட ஒரு சில கட்சிகள் செல்லவில்லை என அறிவித்துள்ளது. திமுக தரப்பு இன்னும் எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு செல்வேன் என்றும் அனைத்து மதத்தினரும் செல்லலாம் என்றும் யாருக்கெல்லாம் விருப்பம் இருக்கிறதோ அவர்கள் அனைவரும் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்கலாம் என்றும் தெரிவித்தார்.

எனக்கு காலில் வலி இருக்கிறது, ஆனாலும் வாய்ப்பு இருந்தால் அயோத்தி ராமர் கோவிலுக்கு விழாவுக்கு செல்வேன் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக அறிவித்துள்ள நிலையில் அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்வேன் என அவர் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்