இந்நிலையில் வெளியூரில் சிக்கி கொண்டுள்ள ஊழியர் ஒருவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ட்விட்டர் மூலமாக கோரிக்கை விடுத்துள்ளார். அதில் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதாகவும், அவருடன் இருக்க முடியாமல் தனியாக வேறு மாவட்டத்தில் தான் சிக்கியுள்ளதாகவும் கூறி தனக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
அவருக்கு பதிலளித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி “உடனடியாக தங்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்ணை தெரிவிக்கவும் தம்பி. நிச்சயமாக தாயையும், சேயையும் பாதுகாக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து கொடுக்கும்.” என்று கூறியுள்ளார்.