நானும் டெல்டாக்காரன்னு சொல்லிக்கிட்டா போதுமா? – காவிரி நீர் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

ஞாயிறு, 1 அக்டோபர் 2023 (13:14 IST)
காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் திமுக அரசு தும்பை விட்டு வாலை பிடிப்பதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.



தமிழகத்திற்கு கர்நாடக அரசு பரிந்துரைக்கப்பட்ட அளவு காவிரி தண்ணீரை திறந்து விடாமல் இழுத்தடிப்பு செய்து வருகிறது. அதேசமயம் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கூடாது என கன்னட அமைப்பினர் பலர் கர்நாடகாவில் போராட்டம், பந்த் நடத்தி வருகின்றனர். தமிழக அரசு தண்ணீர் விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் இந்த நதிநீர் பங்கீட்டு பிரச்சினை குறித்து பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி “காவிரி நதிநீர் விவகாரத்தில் திமுக அரசு தும்பை விட்டு வாலை பிடிக்கிறது. கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு வக்காலத்து வாங்குவதை விட்டுவிட்டு காவிரி நீர் திறக்க உரிய அழுத்தத்தை கர்நாடக அரசுக்கு திமுக தர வேண்டும். ’நானும் ஒரு டெல்டாக்காரன்’ என சொல்லிக்கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெங்களூரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்பதை தவிர்த்திருக்கலாம்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்