ஸ்டிக்கர் ஒட்டியே காலம் போச்சு... ஆளும் அரசிடம் கறார் காட்டிய உதயநிதி!

புதன், 9 டிசம்பர் 2020 (08:54 IST)
திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அதிமுக அரசை வன்மையாக கண்டித்துள்ளார். 
 
சென்னையில் தாய் - மகள் இருசக்கரவாகனத்தில் சென்று நொளம்பூர் அருகே மழைநீர் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்தனர். இவர்களின் மரணத்திற்கு வருத்தம்ம் தெரிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தலா 2 லட்ச ரூபாய் நிதி உதவியையும் வழங்கியுள்ளார்.  
 
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அதிமுக அரசை வன்மையாக கண்டித்துள்ளார். உதயநிதி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது... 
 
திறந்து கிடந்த கழிவுநீர் கால்வாய் - தொட்டியில் விழுந்து தாய்-மகள், ஒரு மாற்றுத்திறனாளி பெண் என 3 உயிர்கள் பலியான சோக சம்பவங்கள் தலைநகரிலும், காஞ்சியிலும் நடந்துள்ளன. மக்கள் நலன் காக்க தவறிய அடிமை அரசால் சாமானிய மக்கள் உயிர்வாழ்வதே சவாலாகியிருப்பதற்கு இந்த சம்பவங்கள் சாட்சி. 
 
2015 பெருவெள்ளத்தின் போது முன்னெச்சரிக்கை பணிகளைச் செய்யாமல் ஸ்டிக்கர் ஒட்டிய கூட்டம், இப்போதும் மக்களைச் சிந்திக்காமல் போஸ்டர் ஒட்டிக்கொண்டிருக்கிறது.  ஓனர்கள் முன் அடிமை என்பதை நிரூபிக்க மெனக்கெடுபவர்கள், மக்களைப் பாதுகாப்பதில் மெத்தனம் காட்டுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்