இயக்குனர் அமீர் வீட்டில் அமலாக்கத்துறை திடீர் சோதனை.. 2 வருடங்களுக்கு முன் வாங்கிய சொத்து என்ன?

Mahendran

செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (10:19 IST)
சென்னை சேத்துப்பட்டில் உள்ள இயக்குனர் அமீர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சென்னை தி.நகர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் சோதனையை தொடர்ந்து, சேத்துப்பட்டு முக்தார் கார்டனில் சோதனை செய்து வருவதாகவும், முக்தார் கார்டன் இல்லத்தை 2 வருடங்களுக்கு முன்  அமீர் வாங்கியதாக தகவல்  வெளியானதை அடுத்து இந்த சோதனை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் சோதனை செய்ய வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அமீர் வீடு பூட்டியிருந்ததால், 10 நிமிடங்கள் காத்திருந்து பிறகு சோதனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.  
 
காலை 7 மணி முதல் சென்னை முழுவதும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருவதாகவும், ரூ.2000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கைதான நிலையில், அமலாக்கத்துறை சோதனை தீவிரமாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்