கூடுதல் டெபாசிட் கட்டணம்: மின்வாரியம் அதிரடி அறிவிப்பு..

செவ்வாய், 20 ஜூன் 2023 (10:20 IST)
தமிழ்நாடு மின்வாரியம் கூடுதல் டெபாசிட் கட்டணம் வசூலிப்பதற்கு நுகர்வோர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து தற்போது கூடுதல் டெபாசிட் கட்டணம் வசூலிப்பதை நிறுத்துவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. 
 
தமிழகம் முழுவதும் வீடுகள் கடைகள் வர்த்தக நிறுவனங்கள் தொழிற்சாலைகளுக்கு கூடுதல் டெபாசிட் தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த கூடுதல் டெபாசிட் தொகை வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த தொகைக்கு மின்வாரியம் 4 சதவீத வட்டியும் வழங்கி வருகிறது. 
 
இந்த நிலையில் கூடுதல் டெபாசிட் தொகைக்கு நுகர்வோர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு வந்ததை அடுத்து தற்போது கூடுதல் டெபாசிட் கட்டணத்தை வசூலிப்பதை நிறுத்துவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறிய போது:
 
கூடுதல் டெபாசிட் கட்டணம் வசூலிப்பதற்கு மின்நுகர்வோரிடம் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. கூடுதல் டெபாசிட் வசூலிக்க வேண்டாம் என முதல்வரும் அறிவுறுத்தி உள்ளார். எனவே, கூடுதல் டெபாசிட் கட்டணம் வசூலிப்பதை மின்வாரியம் நிறுத்தியுள்ளது. ஏற்கெனவே நுகர்வோரிடம் வசூலிக்கப்பட்ட டெபாசிட் தொகை, அடுத்த பில்லில் கழிக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்