இதனை முன்னிட்டு கடந்த 20ம் தேதி முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இன்று மூன்றாம் கால யாகசாலை பூஜை நிறைவு செய்யப்பட்டு மகா பூர்ணாஹூதி தீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து பூஜிக்கப்பட்ட கடங்கள் புறப்பட்டு மேளதாள வாத்தியங்கள் முழங்க கோவிலை சுற்றி வந்து விமான கும்பத்தை அடைந்தது.