இதுகுறித்து பேசிய திமுக பொருளாளர் துரை முருகன் பேசியதாவது, குடியுரிமை சட்டத்திகு எதிராக தீர்மானம் கொண்டு வர இந்த அரசு அஞ்சுகிறது. ஆண்டாள் அடிமை முறையில், தமிழ்நாட்டில் ஆட்சி நடக்கிறது. இந்த முறையை திமுக வன்மையாகக் கண்டிக்கிறது என பேசினார்.
இந்த பேட்டிக்கு முன்னர், சிவப்பு சட்டை அணிந்திருந்த நிருபர் ஒருவர் முந்திக்கொண்டு கேள்வி கேட்க, அதற்கு துரைமுருகன் அந்த நிருபரைப் பார்த்து, சிவப்பு சட்டை அணிந்தவருக்குப் பதில் அளிக்க மாட்டேன், பக்கத்திலிருக்கும் பச்சை சட்டைக்குப் பதில் சொல்கிறேன் என நக்கலாக கிண்டலடித்தார்.