எதிரி நாட்டோடு மோதுவது போல் நினைக்கிறார்கள்.. கர்நாடகாவை கடுமையாக விமர்சித்த அமைச்சர் துரைமுருகன்

செவ்வாய், 31 அக்டோபர் 2023 (12:35 IST)
சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் இவ்வளவு பிடிவாதமாக இருப்பது ஆச்சரியமாக உள்ளது என்றும்,  ஏதோ எதிரி நாட்டோடு மோதுவது போல் நினைக்கிறார்கள் என்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கர்நாடகாவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். 
 
தமிழகத்திற்கு 23 நாட்களுக்கு வினாடிக்கு 2600 கனஅடி நீர் திறந்துவிட காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ள நிலையில் கர்நாடக  நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த நிலையில் கர்நாடக  நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் பேச்சுக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
காவிரியில் 13 ஆயிரம் கன அடி நீர் திறக்க நாங்கள் கோரிக்கை வைத்தோம், உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசு மதிக்காமல் இருப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் இவ்வளவு பிடிவாதமாக இருப்பது ஆச்சரியமாக உள்ளது, ஏதோ எதிரி நாட்டோடு மோதுவது போல் நினைக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்