அப்போது சீட் கிடைக்கவில்லை என யாரும் வருத்தப்பட வேண்டாம். சீட் கிடைக்காதவர்களுக்கு அடுத்து வரும் கூட்டுறவு சங்கம், ஆவீன் சங்கம் போன்றவற்றில் பதவிகள் கிடைக்கும். ஆனால் யாரும் கட்சிக்கு துரோகம் செய்யவேண்டும் என்று மட்டும் நினைக்காதீர்கள். அப்படி நினைத்தால் யாராக இருந்தாலும் நான் கட்டம் கட்டிவிடுவேன். திமுக எத்தனையோ துரோகிகளை பார்த்துள்ளது. அண்ணா காலத்தில் சம்பத், பிறகு கலைஞர் காலத்தில் எம் ஜி ஆர் மற்றும் வை கோ ஆகியோர் என அனைவரையும் நாங்கள் பார்த்திருக்கிறோம். எனப் பேசியுள்ளார். இப்போது வைகோ திமுக கூட்டணியில் இருக்கும் நிலையில் துரைமுருகனின் இந்த லூஸ் டாக் இரு கட்சி தொண்டர்களுக்கும் தர்ம சங்கடமான சூழலை உருவாக்கியுள்ளது.