சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிப்பால் ...போக்குவரத்து நெரிசல்
சனி, 16 ஏப்ரல் 2022 (18:32 IST)
தொடர் விடுமுறையால் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிப்பதால் அங்கு முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு கடந்த 14, 15,16,17 ஆகிய நான்கு தினங்கள் தமிழகத்திலுள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் சுற்றுலாத் தளங்களுக்குச் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளமான கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிப்பதால் அங்கு முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.