அப்போதும் மூத்த பெண் விஷம் குடிக்க மறுத்துள்ளார், அதனால், ராஜசேகர், அப்பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். குடி போதை தெளிந்த பிறகுதான், அவர் செய்த தவறை உணர்ந்துள்ளார். பின்னர், துக்கம் தாங்காமல் தற்கொலை செய்ய முடிவு செய்த ராஜசேகர், தன் மீது மண்ணெண்ணை ஊற்றி தீவைத்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.