சனி, ஞாயிறு தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பள்ளியின் காம்பௌண்ட் சுவரை தாண்டி குதித்து உள்ளே சென்றனர். இதன் பின்னர் சத்துணவு கூட சமையலறையின் பூட்டை உடைத்து குழந்தைகளுக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட சத்துணவு முட்டைகளையும் எண்ணெய், மசாலா பொடிகளை பயன்படுத்தி அங்கேயே ஆம்லெட் போட்டு மது அருந்தி பார்ட்டி கொண்டாடியுள்ளனர்..
கேஸ் சிலிண்டர், மீதம் இருந்த முட்டைகள், அரிசி, பருப்பு , சமையல் எண்ணெய் ஆகியவற்றை போதை இளைஞர்கள் அப்படியே விட்டுச் சென்றதால் சத்துணவு பணியாளர்கள் நிம்மதி அடைந்தனர். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.