வாக்கு எண்ணும் மையத்தின் மேலே டிரோன் கேமரா: நாகையில் பரபரப்பு

செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (08:43 IST)
வாக்கு எண்ணும் மையத்தின் மேலே டிரோன் கேமரா: நாகையில் பரபரப்பு
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் அன்றைய தினம் பதிவான வாக்குகள் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு சீல் இடப்பட்டுள்ளன. இந்த மையங்களுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் காவல் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இருப்பினும் வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை இன்டர்நெட் மூலம் டிராக் செய்து முறையீடு செய்யும் முயற்சிகள் நடப்பதாக திமுக உள்பட எதிர்க்கட்சிகள் ஏற்கனவே குற்றம் சாட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி வாக்கு எண்ணும் மையத்தில் மேலே ட்ரோன் கேமரா பறந்ததால் நாகையில் உள்ள தெத்தி என்ற பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டிரோன் கேமரா பறந்த இடத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் திமுகவினர் திரண்டதால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. இதனை அடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்