அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூடவும், சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுக்கும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் குடிநீர் உரிமையாளர்கள் இன்று மாலை ஸ்டிரைக்கை அறிவித்துள்ளனர்.
நீதிமன்றத்தின் உத்தரவால் குடிநீர் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீரையும், குடிநீருக்காக எடுக்கப்படும் நீரையும் ஒருசேர பார்க்கக்கூடாது.எனவே இன்று மாலை குடிநீர் ஆலை உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்யவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.