ரயில் கட்டண உயர்வை ஏற்று கொள்வதை தவிர வேறு வழியில்லை: டாக்டர் ராமதாஸ்

புதன், 1 ஜனவரி 2020 (12:06 IST)
ரயில் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் இந்த கட்டண உயர்வுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் சமூக ஆர்வலர்களும் இந்த கட்டண உயர்வு ஏழை எளிய மக்களை மிகவும் பாதிக்கும் என்றும் கூறிவருகின்றனர்
 
இந்த நிலையில் இந்த கட்டண உயர்வு குறித்து கருத்து கூறிய பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் ’ரயில் கட்டண உயர்வு மிகக்குறைவாக இருப்பது ஏழை, நடுத்தர மக்களிடையே ஒரு வகையான நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது என்றும், அதிக பாதிப்புகள் இல்லாத நிலையில் கட்டண உயர்வை ஏற்றுக்கொள்வதை தவிர வேறு வழி இல்லை என்றும், கட்டணத்தை உயர்த்தும் அதே நேரத்தில் ரயில்களில் பயணிகளை பயணிகளுக்கான வசதியை மேம்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்
 
பாமக தலைவர் ராமதாஸ் அவர்களின் இந்த கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கூட்டணி தர்மம் என்ற பெயரில் மத்திய அரசு செய்யும் அனைத்து செயல்களுக்கும் டாக்டர் ராமதாஸ் அவர்கள் ஆதரவு தருவது சரி இல்லாத ஒன்று என்று கூறிவருகின்றனர்
 
முன்னதாக ரயில்வே கட்டணங்கள் சாதாரண வகுப்பு ரயில்கள் கிலோ மீட்டருக்கு 1 பைசா உயர்த்தப்பட்டுள்ளதாகவும், குளிர்சாதன வசதி இல்லா விரைவு ரயில் கட்டணம் கிலோ மீட்டருக்கு 2 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், ஏசி வகுப்புகளுக்கு கிலோ மீட்டருக்கு 4 பைசா உயர்த்தப்பட்டுள்ளதாகவும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் நகர்ப்புற மற்றும் சீசன் ரயில் கட்டணங்களில் எந்தவித மாற்றமில்லை என்றும் ரயில்வே நிர்வாகம் உறுதி செய்துள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்