மதிக்காத சோசியல் மீடியா.. சொந்தமாக இணையதளம் தொடங்கிய ட்ரம்ப்!

செவ்வாய், 30 மார்ச் 2021 (17:35 IST)
அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப்பின் ட்விட்டர், யூட்யூப் பக்கங்கள் முடக்கப்பட்ட நிலையில் புதிய வலைதளத்தை அவரே தொடங்கியுள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் ட்விட்டர், யூட்யூபில் தான் வைத்திருந்த கணக்குகளில் தனது ஆதரவாளர்களுடன் பேசி வந்த நிலையில் அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்துவதாக உள்ளதாக அவரது கணக்குகள் அடிக்கடி முடக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் தற்போது அதிபர் ட்ரம்ப் தனது ஆதரவாளர்கள் மற்றும் மக்கள் தன்னை தொடர்பு கொள்ள புதிய வலைதளத்தை உருவாக்கியுள்ளார். தான் அமெரிக்காவின் 45வது அதிபராக இருந்ததை உணர்த்தும் வகையில் அந்த தளத்திற்கு 45office.com என பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்