விசாரணையில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கவுதம் சுதர்சன் மற்றும் ஆஷிஷ் பால் ஆகிய இருவரும்தான் அதற்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது. கவுதம் சென்னை குன்றத்தூரில் தங்கியிருந்து கொண்டு, மருத்துவம் படித்து வருகிறார். அவர் தங்கியிருந்த மாடிக்கு வந்த குட்டி நாயைத்தான் அவர் மாடியிலிருந்து தூக்கி கீழே வீசியிருக்கிறார். இதை அவரது நண்பர் ஆஷில் பால் வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், தூக்கி விசப்பட்ட அந்த குட்டி நாய், காலில் காயத்தோடு மீட்கப்பட்டுள்ளது. அதற்கு மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது.