11 வயது சிறுவனை கடித்துக் குதறிய ராட்வீலர் நாய்.. நாயின் உரிமையாளர் மீது புகார்..!

Siva

வெள்ளி, 21 ஜூன் 2024 (16:24 IST)
மாங்காடு பகுதியில் 11 வயது சிறுவனை  ராட்வீலர் நாய் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாயின் உரிமையாளர் மீது மாங்காடு காவல்நிலையத்தில் சிறுவனின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
 
மாங்காடு பகுதியில் கொழுமணிவாக்கம் சார்லஸ் நகரில் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த சிறுவன் துஜேஷ் என்பவரை நடைப்பயிற்சிக்கு சென்ற உரிமையாளரின் பிடியில் இருந்து நழுவி ராட்வீலர் சிறுவனை கடித்து குதறியது. இதனால் படுகாயமடைந்த சிறுவன் துஜேஷுக்கு பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இதனை அடுத்து சிறுவனின் பெற்றோர் நாயின் உரிமையாளர் மீது காவல்துறையில் வழக்கு புகார் அளித்திருக்கும் நிலையில் காவல்துறையினர் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். நாயின் உரிமையாளர்கள் தங்களது நாயை பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும் என்றும் பொதுமக்களை நாய் கடித்தால் நாயின் உரிமையாளர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் ஏற்கனவே சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது என்பதை தெரிந்ததே. இந்த நிலையில் எச்சரிக்கையும் மேரி கவனக்குறைவாக நாயை நடை பயிற்சிக்கு அழைத்துச் சென்ற நாயின் உரிமையாளர் மீது வழக்குகள் பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்