தமிழகத்திற்கு ஆர்மி ஃபோர்ஸ் தேவையா? ஈபிஎஸ் முடிவு என்ன??
புதன், 1 ஏப்ரல் 2020 (10:02 IST)
ஆளுநர் மற்றும் முதல்வருடனான கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம் கூட்டத்தில் என்ன நடந்தது என தெரிவித்தார்.
இந்தியா முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் தமிழகத்தில் நேற்று மதியம் வரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74 ஆக இருந்தது. திடீரென இந்த எண்ணிக்கை வேகமாக உயர்ந்த 124 ஆக உள்ளது. இதனால் தேசிய அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மூன்றாம் இடத்தில் தமிழகம் உள்ளது.
இந்நிலையில், நேற்று ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோக், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், டிஜிபி திரிபாதி ஆகியோர் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினர்.
இந்த கூட்டம் முடிந்த பின்னர் தலைமைச் செயலாளர் சண்முகம் கூட்டத்தில் என்ன நடந்தது என தெரிவித்தார். அவர் கூறியதாவது...
1. மருத்துவர்களுக்கு N95 முகக்கவசம் அணிந்துதான் வேலைபார்க்க வேண்டும்
2. 1.5 கோடி முகக்கவசம் வாங்க உத்தரவு, முன்னரே N95 முகக்கவசம் 25 லட்சமும், 2500 வெண்டிலேட்டர்கள் வாங்கப்பட்டுள்ளது.
3. டெல்லியில் நடந்த மாநாட்டில் சென்று வந்தவர்கள்தான் அதிக அளவில் கொரோனாவால் பாதித்துள்ளனர்.
4. முகக்கவசம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் திருப்பூரில் அதைத் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
5. சிறையில் இருப்பவர்களும் முகக்கவசம் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
6. அரசு அறிவித்துள்ள நிவாரண உதவித் தொகையை வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கப்படும்.
7. வீட்டு வாடகையை யாரும் கேட்கக் கூடாது.
8. தமிழகத்திற்கு ராணுவம் தேவையில்லை, போதுமான நடவடிக்கைகளை தமிழக காவல்துறை சிறப்பாகச் செய்து வருகிறது.