தவறான சிகிச்சையால் சிறுவன் கால் அகற்றம்.. சென்னை மருத்துவமனையின் அங்கீகாரம் ரத்து..!

Mahendran

வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (14:08 IST)
தவறான சிகிச்சையால் சிறுவனின் கால் அகற்றப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் சென்னை மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை வேளச்சேரி சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கு சில நாட்களாக கால் வலி இருந்த நிலையில் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் திடீரென சிறுவனின் காலை அகற்ற வேண்டும் என்றும் இல்லாவிட்டால் சிறுவனின் உயிருக்கு ஆபத்து என்றும் கூறி மருத்துவர்கள் சிறுவனின் காலை அகற்றி உள்ளனர்.

இந்த நிலையில் தவறான சிகிச்சை காரணமாக தான் தனது மகனின் கால் அகற்றப்பட்டதாக சிறுவனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இந்த புகார் குறித்து விசாரணை செய்யப்பட்டது.

விசாரணையில் அந்த மருத்துவமனை உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்தது என்றும் போதிய மருந்துகள் மற்றும் அவசர அவசரகால மருத்துவர்கள் இல்லை என்பதும் தெரிய வந்தது. இதனை அடுத்து அந்த மருத்துவமனையின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அது மட்டும் இன்றி 15 நாட்களுக்குள் சிறுவனின் சிகிச்சை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்