வருமான வரித்துறை டாக்டர் சிவகுமாருக்கு சம்மன்: நேரில் ஆஜராகி விளக்கம்!

திங்கள், 13 நவம்பர் 2017 (12:54 IST)
தமிழகம் முழுவதும் சசிகலா குடும்பத்தை குறி வைத்து சோதனை நடத்தி பரபரப்பை ஏற்படுத்திய வருமான வரித்துறை ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த சசிகலா குடும்பத்தை சேர்ந்த டாக்டர் சிவகுமாரின் வீட்டிலும் சோதனை நடத்தியது. இந்த சோதனையின் போது ஜெயலலிதாவின் சிகிச்சை, மரணம் குறித்தான தகவல் சிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.


 
 
இந்நிலையில் டாக்டர் சிவக்குமார் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அவருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அறிவுறுத்தியுள்ளது. இதனை ஏற்ற டக்டர் சிவக்குமார் வருமான வரித்துறையின் சம்மனை அடுத்து விசாரணைக்காக, சென்னை வருமானவரித்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராகியுள்ளார்.
 
சசிகலா குடும்பத்தை குறி வைத்து நடந்த இந்த வருமான வரி சோதனையின் முடிவில் யாருக்கெல்லாம் சம்மன் அனுப்பப்பட்டது என்ற தகவலை வருமான வரித்துறை இதுவரை வெளியிடவில்லை. சம்மன் பெற்றவர்கள் ஆஜராகும் போது தான் தெரிகிறது.
 
அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் சந்தேகம் இருப்பின் அதுகுறித்த விளக்கம் பெறவே அவர்கள் விசாரணைக்கு நேரில் அழைக்கப்பவர். அவர்களது விளக்கத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திருப்தியடையவில்லை என்றால் அவர்கள் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்