ராம்குமாரைக் கொண்டுவந்தபோது நீங்கள் பார்த்தீர்களா? என அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது அதற்கு பதில் அளித்த அவர், பார்த்தேன். 4:45 மணிக்கு தற்கொலை செய்துகொண்டதாக ஆம்புலன்ஸில் வந்த மருத்துவர் நவீன் சொன்னார். வரும் வழியில் துடிப்பு இருந்து என்றும், பாதி வழியில்தான் உயிரிழந்தார் என்றும் அவர், என்னிடம் தெரிவித்தார்.
அதனால், நாங்கள் சோதித்துப் பார்க்கவில்லை. பின்னர், ரிஜிஸ்டரில் 5.45 மணி என பதிவுசெய்துவிட்டு மார்சுவரிக்கு அனுப்பிவைத்தோம். அப்படிப் பார்க்கும்போது ராம்குமார் 5 மணிக்கு உயிரிழந்திருக்கலாம். ராம்குமாரின் உடலைப் பார்த்தபோது அவரது இடது தோள்பட்டையில் சிராய்ப்பு இருந்தது. வாயிலும் காயம் இருந்தது என கூறினார்.
ராம்குமாரை சிறையில் இருந்து வெளியே கொண்டு வரும்போது உயிர் இருந்திருக்கிறது. வரும் வழியில் உயிர் பிரிந்தது என்று ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவர் கூறியதை வைத்துக்கொண்டு ராம்குமாரை எப்படி மார்சுவரிக்கு அனுப்பினார்கள். அவர் உண்மையிலேயே இறந்துவிட்டாரா என சோதித்திருக்க வேண்டும் அல்லது அவரது மூச்சை திரும்ப பெறவைக்க முயற்சிகளை மேற்கொண்டு இருக்கலாமே. இதில் ஏன் மருத்துவர் அலட்சியமாக இருந்தார் என்ற கேள்விகளை பலரும் எழுப்பி வருகின்றனர்.