கேன் தண்ணி குடிக்கிறீங்களா? உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை! - கேன் பயன்பாட்டில் இவ்ளோ ரிஸ்க்கா?

Prasanth Karthick

செவ்வாய், 6 மே 2025 (15:25 IST)

குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்படும் பெரிய தண்ணீர் கேன்களை தொடர்ந்து பயன்படுத்துவது குறித்து உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

சென்னை உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் குடிநீர் தேவைக்கு 25 லிட்டர் தண்ணீர் கேன்களை பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது. இந்த தண்ணீர் கேன்களை ஏஜெண்டுகள் வருடக் கணக்கில் கூட கழுவி அப்படியே தண்ணீர் பிடித்து விற்பதும் நடக்கிறது. ஆனால் இந்த பிளாஸ்டிக் தண்ணீர் கேன்களை அவ்வாறாக நீண்ட காலத்திற்கு பயன்படுத்துவது ஆபத்தானது என உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்துகிறது.

 

அதன்படி, ஒரு குடிநீர் கேனை 30 முறை மட்டுமே மறுசுழற்சி மூலம் குடிநீர் நிரப்பி பயன்படுத்த வேண்டும். நாளாக நாளாக கேன்களின் நிறம் மாறும்போது அவற்றில் குடிநீர் நிரப்பி விற்பதை தவிர்க்க வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தியுள்ளது.

 

மேலும், தரமின்றியும், முறையான அனுமதி பெறாமலும் கேன் குடிநீர் விற்பனை செய்வது தெரிய வந்தால் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களும் தாங்கள் வாங்கும் கேன் தண்ணீருக்கு பயன்படுத்தும் கேன்களின் சுத்தம் பற்றி எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்