கேள்வி கேட்டால் தேச துரோகிகளா? முக ஸ்டாலின் ஆவேசம்

புதன், 28 ஆகஸ்ட் 2019 (06:42 IST)
மத்திய அரசை எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் தேச துரோகிகளா? என திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
 
சேலத்தில் நேற்று நடைபெற்ற திராவிடர் கழகத்தின் பொன்விழா மாநாட்டில் திமுக தலைவர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு அந்த இயக்கத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். தங்களது  தாய் கழகத்துக்கு வாழ்த்துக்கூற வந்துள்ளதாக கூறிய ஸ்டாலின், இந்த இயக்கம் பலநூறு ஆண்டுகள் வாழ வேண்டும் என்றும், திராவிட கழகத்தை யாராலும் அழிக்க முடியாது ​என்றும் பேசினார். மேலும் திராவிட கழகம் முன்பை விட வேகமாக வளர்ந்து வருவதாகவும் அவர் கூறினார்
 
கடன் வாங்கிய பெருமுதலாளிகளை மத்திய அரசு தப்பவிட்டது என்றும் அவர்களை தப்பவிட்டது ஏன் என கேள்வி கேட்பவர்களை தேச துரோகிகள் என்று குற்றஞ்சாட்டுவதாகவும், மத்திய அரசு செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி கேள்வி கேட்பவர்கள் தேச துரோகிகளா? என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 
 
மேலும் இந்திய பொருளாதாரம் அதலபாதாளத்தில் சென்று கொண்டிருப்பதாக கூறிய ஸ்டாலின், இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியை மறைக்கவே, காஷ்மீர் அந்தஸ்து ரத்து, சிதம்பரம் கைது போன்ற நாடகங்கள் நடத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டினார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்