தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான மறைந்த கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் ஜூன் 3ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த பிறந்தநாள் விழாவை இந்த ஜூன் தொடங்கி அடுத்த ஜூன் வரை சிறப்பாக கொண்டாட திட்டமிடப்பட்டு வருகிறது. இதுகுறித்து திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. கலைஞரின் சாதனைகள், திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் வகையிலான நிகழ்வுகளை முன்னெடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.