தே.மு.தி.க., கட்சி நிச்சயமாக அ.தி.மு.க.,வுடன் கூட்டணியில் இடம் பெறும் - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

ஞாயிறு, 3 மார்ச் 2019 (17:02 IST)
கரூர் மாவட்டம் சின்ன ஆண்டாங்கோவில் கிழக்கு பஞ்சாயத்து பகுதியில் 5 கோடியே 77 லட்சம் ருபாய் மாதிப்பில் பல்வேறு திட்டப்பணிகளுக்காக பூமி பூஜையை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். 
பின்னர் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் அ.தி.மு.க., கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி என்றும் நிச்சயம் அ.தி.மு.,க., வுடன் தே.மு.தி.க., கூட்டணி சேரும், 40 ம் நமதே என்று சொல்லி கொண்டிருப்பவர்கள் அ.தி.மு.க., கூட்டணியை பர்த்து அச்சம் அடைந்து  வருகின்றனர். 
 
தமிழகம் தற்போது உலக வங்கியில் பல லட்சம் கோடி ருபாய் கடன்வைத்துள்ளது என்ற கேள்விக்கு, மற்ற மாநிலங்களைவிட தமிழகம் வரைமுறையுடன்தான் உள்ளது தமிழகம் வளர்ச்சி பாதையில் நோக்கு சென்று கொண்டிருக்கிறதது.
 
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெலலிதா உலக முதலீட்டார் மாநாட்டில் தமிழகத்திலங் 2 லட்சத்து 70 கோடி ருபாய் வர்த்தகம் நடைபெற்றது. தற்போது நடந்த உலக முதலீட்டார் மாநாட்டில் 3 லட்சம் கோடி அளவிற்கு தமிழகத்தில் முதலீடு செய்துள்ளனர் என்றார்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்