சென்னை அண்ணாநகர் திமுக எம்எல்ஏ வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!

திங்கள், 24 ஏப்ரல் 2023 (09:59 IST)
திமுக குடும்பத்தினருக்கு சொந்தமானது என்று கூறப்படும் ஜீ ஸ்கொயர் நிறுவனத்தின் அலுவலகங்களில் இன்று காலை முதல் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருவதாக வெளியான தகவலை பார்த்தோம். 
 
இந்த நிலையில் சென்னை அண்ணாநகர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மோகன் மற்றும் அவரது மகன் கார்த்திக் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது. 
 
மோகன் மகன் கார்த்தி, ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் நிர்வாகியாக உள்ளதால் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. திமுக பிரமுகர்கள் வீட்டில் அடுத்தடுத்து வருமானவரித்துறை என சோதனை நடத்தப்பட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னால் அண்ணாமலை திமுகவினரின் மீது கூறிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தான் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தமிழக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்