இந்நிலையில் அடுத்தக்கட்டமாக “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பெயரில் ஒவ்வொரு தொகுதியாக மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இந்த சந்திப்பின்போது மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகள் மற்றும் புகார்களை அளிக்கும் வகையில் விண்ணப்பங்கள் வழங்கப்படும். விண்ணப்பங்கள் மூலமாக பெறப்பட்ட புகார்கள் பாதுகாக்கப்பட்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களுக்குள் அனைத்து பிரச்சினைகளும் போர்கால் அடிப்படையில் சரிசெய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.