தமிழகத்தில், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களின் திருமண விழாக்களில், அந்த கட்சித் தலைவர்களை புகழும் வகையில் பேனர்களும், போஸ்டர்களும் ஒட்டுவது வழக்கம்.
அந்த வரிசையில் தற்போது சென்னை வில்லிவாக்கம் அருகே, திமுக ஒன்றியச் செயலாளர் ஒருவரின் இல்ல திருமண விழாவுக்காக ஒட்டப்பட்ட போஸ்டரில், திமுக தலைவர் ஸ்டாலினை குறிப்பிட்டு “வெடி மருந்து கிடங்கே” என்ற வாசகம் இடம்பெற்றிருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.