இந்த நிலையில் இந்த தோல்வி குறித்து கருத்து கூறிய விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவர்கள், ‘வன்னியர்களுக்கு சலுகைகள் தருவதாக திமுக அறிவித்த உத்தியே தோல்விக்கு காரணம் என்று கூறினார். திமுகவின் இந்த அறிவிப்பு வன்னியர் அல்லாத பிற சமூக மக்களை பெரும் அதிர்ச்சி அடைய செய்ததாகவும் அதனால் வாக்குகள் கிடைக்காமல் போனதாகவும் தெரிவித்தார். திமுகவின் இந்த அறிவிப்பே அக்கட்சியின் தோல்விக்கு முழுமையான காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
இந்த நிலையில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தோல்வியை அடுத்து திமுக நிர்வாகிகள் மீது தலைவர் முக ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன,