திமுக தேர்தல் அறிக்கை காப்பி பேஸ்ட்டா? அதே வாக்குறுதிகள் ரிப்பீட்டு..!

Siva

வியாழன், 21 மார்ச் 2024 (07:13 IST)
திமுக தேர்தல் அறிக்கை நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஒரு சில அரசியல் விமர்சகர்கள் இந்த தேர்தல் அறிக்கை குறித்து கருத்து கூறிய போது சாத்தியமில்லாத வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கூட செய்ய முடியாத சில வாக்குறுதிகளை திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக நீட் தேர்வு ரத்து என்பது அகில இந்திய அளவில் ஒப்புக்கொள்ளாத ஒரு விஷயம் என்றும் அதேபோல் பெட்ரோல் 75 ரூபாய் என்பது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என்றும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் ஒரு சில விமர்சகர்கள் ஏற்கனவே திமுகவின் முந்தைய தேர்தல் அறிக்கைகளில் இருந்த வாக்குறுதிகள் தான் மீண்டும் மீண்டும் அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளனர்

குறிப்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலின் போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து, திருக்குறளை ,தேசிய நூலாக மாற்றப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. அதேபோல் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்று வாக்குறுதியும் ஏற்கனவே அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் என சுட்டிக்காட்டி உள்ளனர்

கடந்த 2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போதும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகள் மீண்டும் தற்போது இடம் பெற்று இருப்பதாகவும் இதனை அடுத்து இந்த தேர்தல் அறிக்கை காப்பி பேஸ்ட் போல் தெரிகிறது என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்