சென்னையில் பூத் ஸ்லிப்புடன் பணம் விநியோகம்! – அதிமுக மீது திமுக குற்றச்சாட்டு!

சனி, 19 பிப்ரவரி 2022 (09:51 IST)
நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் அதிமுகவினர் பூத் ஸ்லிப்புடன் பணப்பட்டுவாடா செய்வதாக திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பொதுமக்கள் பலர் காலை முதலே ஆர்வமாக தனது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

சென்னை மாநகராட்சி திருவான்மியூரில் 179வது வார்டு சிங்காரவேலன் நகரில் பூத் ஸ்லிப்புடன் அதிமுகவினர் பணம் வழங்குவதாக திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். பணம் வழங்கிய அதிமுகவினரை பிடிக்க முயன்றபோது அவர்கள் தப்பிவிட்டதாக திமுகவினர் கூறிய நிலையில் போலீஸார் பணம் வழங்கியது யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்