திமுக-அதிமுக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய பாஜக போர்க் கொடி

ஞாயிறு, 29 மே 2016 (12:13 IST)
திமுக, அதிமுக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
 

 
தமிழ்நாட்டில், மே 16 ஆம் தேதி 232 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை  தொகுதியில் மட்டும் தேர்தல் நடைபெறவில்லை.
 
காரணம், வாக்காளர்களுக்கு லஞ்சமாக பணம் மற்றும்  பல்வேறு பரிசுப்பொருட்களை திமுக வேட்பாளர் கே.சி.பழனிசாமி மற்றும் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி ஆகியோர் கொடுத்துள்ளதாக தேர்தல் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
 
இதனையடுத்து, அரவக்குறிச்சி மற்றம் தஞ்சை தொகுதியில் மே 23 ஆம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தன. பின்பு, இந்த விவகாரம் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு சென்ற பின்பு, ஜூன் 13 ஆம் தேதிக்கு தேர்தலை ஒத்திவைத்துள்ளதாக கூறியது. பின்பு, கடைசியாக, அரவக்குறிச்சி மற்றம் தஞ்சை தொகுதியில் தேர்தல் நடத்தும் சூழ்நிலை இல்லை என கைவிரித்தது.
 
இது குறித்து, மத்திய பாஜக அமைச்சர் பொன்.ராதாகிஷ்ணன் கருத்து கூறுகையில், அரவக்குறிச்சி மற்றம் தஞ்சை தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கியதாக தேர்தல் ஆணையமே கூறியுள்ளது. எனவே, திமுக, அதிமுக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றார்.
 
இதை முன்வைத்து பாஜக தமிழகம் முழுக்க போராட்டம் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்