வெற்றி பெற்ற 3 மணி நேரத்தில் திமுகவில் இணைந்த தேமுதிக வேட்பாளர்!

புதன், 23 பிப்ரவரி 2022 (07:10 IST)
வெற்றி பெற்ற 3 மணி நேரத்திலேயே தேமுதிக வேட்பாளர் திமுகவில் இணைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக இடங்களில் வெற்றி பெற்றது மட்டுமின்றி வெற்றி பெற்ற வேட்பாளர் மற்றும் பிற கட்சியின் வேட்பாளர்களை இழுத்து வருவதாக கூறப்படுகிறது
 
அந்த வகையில் ஏற்கனவே ஒரு சில வெற்றி பெற்ற வேட்பாளர்களை தன் வசமாக்கிக் கொண்ட திமுக தற்போது தேமுதிக வேட்பாளர் ஒருவரையும் தன்வசம் ஆக்கிக் கொண்டது 
 
திருமங்கலம் நகராட்சி 7வது வார்டில் வெற்றி பெற்ற வேட்பாளர் சின்னசாமி என்பவர் வெற்றி பெற்ற மூன்று மணி நேரத்தில் திமுகவில் இணைந்தார். இதனை அடுத்து திருமங்கலம் நகராட்சியும் திமுக வசமாவது உறுதி செய்யப்பட்டுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்